வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் தொடர்பில் தவிசாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…!!கொவிட்-19 தாக்கம் வவுனியாவில் அதிகரித்துவருவதை கருத்தில் கொண்டு நகரில் அமைந்துள்ள அனைத்து தனியார் கல்விநிலையங்கள் மற்றும், பிரத்தியேக வகுப்புக்களை உடனடியாக இடைநிறுத்துமாறு வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துச்செல்கின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் நகரிற்குட்பட்ட தனியார் கல்விநிலையங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்களின் கல்விச்செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு உரிய தரப்புகளிற்கு அறிவித்தல் விடுக்கின்றோம்.

கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே தனியார் கல்விநிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் பலர் இரகசியமான முறையில் மாணவர்களை வரவழைத்து கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே குறித்த உத்தரவுகளை மீறி அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம். என்று தெரிவித்தார்.

hey