சற்றுமுன் இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் முடக்கம்சற்றுமுன்

இன்று (17) காலை 6.00 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, மற்றும் ஆலையடிவேம்பு போன்ற பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதை தெரிவித்தார்.
அத்துடன், மொனராகலை மாவட்டத்தில் அலுபொத கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில்

அக்கரைப்பற்று – 5
அக்கரைப்பற்று – 15
அக்கரைப்பற்று நகரம் – 3

அட்டாளைச்சேனை பொலிஸ் பகுதியில்,

பாலமுனை – 1
ஒலுவில் – 2
அட்டாளைச்சேனை – 8

ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில்

ஆலையடிவேம்பு – 8/1
ஆலையடிவேம்பு – 8/3
ஆலையடிவேம்பு – 9

hey