வவுனியாவில் சுகாதார பிரிவினரால் திடீரென காப்புறுதி நிறுவனம் முற்றுகை : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைவவுனியாவில்

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலிருந்த தனியார் காப்புறுதி நிறுவனத்தில் இன்று (16.12.2020) காலை 100க்கு மேற்பட்டவர்களுடன் ஒன்று கூடல் கூட்டம் இடம்பெற்ற நிலையில் சுகாதார பொது பரிசோதரின் உத்தரவின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது.

நாட்டில் தற்போது கோவிட்-19 தொற்று அதிகரித்து வருகின்ற இந் நிலையில் நாடு முழுவதும் கோவிட் -19 சுகாதார நிபந்தனைகளுடன் கூட்டங்கள் , நிகழ்வுகள் , அலுவலக பணிகள் என்பன இடம்பெற்று வருகின்றமையுடன் வவுனியா மாவட்டத்தில் கடந்த 4 நாட்களிக்குள் மாத்திரம் 8 கோவிட்-19 நோயாளர்கள் இணங்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் சமூகத்துடன் தொடர்புடைய நிலையில் எழுமாற்றாக பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சமயத்தின் போதே கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழ்நிலை வவுனியா மாவட்டத்தில் நிலவி வருகின்ற இந் நிலையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலிருந்த தனியார் காப்புறுதி நிறுவனத்தில் இன்று காலை 100க்கு மேற்பட்டவர்களை ஒன்று திரட்டி கோவிட் -19 நடைமுறையினை பின்பற்றாது ஒன்று கூடல் ஒன்று இடம்பெற்றது.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் , பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து குறித்த தனியார் காப்புறுதி நிறுவனத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர் ஒன்று கூடல் நிகழ்த்துவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தமையுடன் அனைவரையும் அவ்விடத்திலிருந்து செல்லுமாறு பணிப்புரை வழங்கினார்.

அதன் பின்னர் குறித்த தனியார் காப்புறுதி முகாமையாளருக்கு கோவிட் -19 விதிமுறை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகரினால் (வருகை தருவர்களின் பெயர்களை பதிவு செய்தல் , கைகளுவும் வசதி , சமூக இடைவெளி போன்றன ) அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

வவுனியாவில் நான்கு மேற்பட்ட பாடசாலைகள் காலவறையின்றி மூடப்பட்டதுடன் மூன்று கிராமங்களும் சுகாதார பரிசோதகர்களினால் மூடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey