வாகன இலக்க தகடுகளில் இனி மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்கள் இனி இல்லை : வெளியாகிய தகவல்வாகன இலக்கத்தகடுகளில் இருந்து மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வாகனங்களை பதிவு செய்யும் போது வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தை அடையாளம் காண்பதற்காக குறியீட்டு எழுத்துகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது, புகை பரிசோதனை மர்றும் வருடாந்த வருமான வரிப் பத்திரம் வழங்குவதற்கு இலகுவாக இருந்தாலும், மாகாணங்களுக்கிடையில் வாகன் உரித்தை மாற்றும் போது ஒவ்வொரு தடவையும் இலக்கத்தகட்டை மாற்ற வேண்டியுள்ளது.

இதன்காரணமாக, சேவை பெறுபவர்கள் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையுள்ளது.

இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் போது மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

hey