யாழில் மேலும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : அச்சத்தில் யாழ் மக்கள்யாழ். மருதனார்மடம்

யாழ். மருதனார்மடம் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் இன்றிரவு கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே/185 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கே முதலில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று அவரின் குடும்ப உறவுகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அனைவரும் கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கும் கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

hey