வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் த.காண்டீபன் நியமனம்வவுனியா வைத்தியசாலை

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் இடமாற்றம் பெற்று சென்ற நிலையில் புதிய பணிப்பாளராக வைத்தியர் த.காண்டீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் , மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் , முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகும் அவரது பணிகளை திறன்பட மேற்கொண்ட வைத்தியர் த.காண்டீபன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது வரையிலான காலமும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளாராக சேவைகளை திறன்பட கடமையாற்றிய வைத்தியர் க.நந்தகுமார் வடமாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

hey