வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தாய் மற்றும் 5 வயது பிள்ளைக்கு கொரோனா தொற்று உறுதிவவுனியாவில்

யாழ்ப்பாணத்தில் பிசிஆர் பரிசோதனை மூலம் இன்று தொற்று உறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த தாயும் பிள்ளையும் பத்து நாட்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து வவுனியா திரும்பியவர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சாளம்பைக்குளத்தைச் சேர்ந்தவர்களான அவர்களில் தாய்க்கு 28 வயது என்றும் பிள்ளைக்கு 05 வயது என்றும் அவர்கள் வீடுகளில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்துநாட்கள் கடந்த நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

hey