வவுனியா சிவபுரம் கிராமத்தில் தேசிய வீட்டுத் தோட்ட செயற்றிட்டம் ஆரம்பித்து வைப்பு



வவுனியாவில்

வவுனியா செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் தேசிய வீட்டுத் தோட்டச் செயற்றிட்டத்தின் கீழ் கன்றுகள் , விதைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் சு.கிருசிகா தலமையில் சிவபுரம் கிராமத்தில் வீட்டுத்தோட்டம் மூலம் பயனடைந்த பயனாளி ஒருவரின் வீட்டில் இன்று காலை நடைபெற்றிருந்தது.

வீட்டுப் பொருளாதாரம் , போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுளை வலுவூட்டும் தேசிய வீட்டுத் தோட்ட செயற்றிட்டத்தின் கீழ் சிவபுரம் , ஹிஜ்ராபுரம் , புதிய கோவில்குளம் , செல்வாநகர் ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு புடோல் , புசிட்டா , பாகல் , கீரை போன்ற விதைகளும் , கத்தரி , தக்காளி , மிளகாய் போன்ற கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன

இந் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.சுதர்சினி , சமூர்த்தி உத்தியோகத்தர் து.கீர்த்திசிங்கம் , பட்டதாரி பயிலுனர்கள் , பொது சுகாதார பரிசோதகர் ஜோ.ரோய் , குடும்ப நில உத்தியோகத்தர் ரொசிற்றா என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

hey