வவுனியாவில் 1392 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் போராட்டம்வவுனியாவில்

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்பாக சுழற்சி முறையில் 1392 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (12.10.2020) மதியம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு க டத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினரினால் இவ் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா நகரசபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா நகரசபை முன்றலில் ஐரோப்பிய> அமெரிக்க கொடிகளை ஏந்தியவாறும் ஆரம்பமான இவ் கவனயீர்ப்பு பேரணியானது பூங்கா வீதியூடாக ஏ9 வீதியினை வந்தடைந்து 1392 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகையில் முடிவடைந்ததுடன் அவ்விடத்தில் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்

hey