வடக்கில் உள்ள வைத்தியசாலைக்கு 101 வைத்தியர்கள் நியமனம்வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 101 வைத்தியர்களுக்கான நியமனம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு சுகாதார அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்களில் 27 வைத்தியர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் 20 வைத்தியர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் ஏனையவர்கள் ஏனைய மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தவிர்ந்த அனைத்து மாவட்ட, ஆதார மற்றும் பிரதேச வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு 101 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நியமனம் அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் ஒருதொகுதி வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்
எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

hey