வவுனியாவில் நீர்தேக்கம் ஒன்றில் தவறி விழுந்து கா_ணாமல் போன மாணவன் ச_டலமாக மீட்புவவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் வெள்ளிக்கிழமை மாலை நீரில் அ_டித்து செல்லப்பட்ட நிலையில் இன்று (06.12) ச_டலமாக மீட்கப்பட்டார்.

அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி வருகின்றது. இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமுள்ளனர்.இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக தி.தனுசன் (வயது 18) என்ற மாணவன் தனது நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை மதியம் அங்கு சென்றிருந்தார். இதன்போது நீர் வழிந்தோடும் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீருனுள் இறங்கி மாணவனை நீண்ட நேரம் தேடியும் கண்டறிய முடியவில்லை.

ச_ம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், காணாமல் போன மாணவனை நேற்றும் (05.12) எட்டு மணி தாெடக்கம் கடற்ப_டையினர், இராணுவம் மற்றும் கிராமத்து இளைஞர்கள் இணைந்து தே_டிய போதும் கண்டு பிடிக்கவில்லை.

இன்றைய தினம் (06.12) காலை மீண்டும் இளைஞர்கள் நீர் ஒடும் பகுதியில் தேடுதல் நடத்திய போது கல் ஒன்றில் அ_கப்பட்டு இருந்த நிலையில் குறித்த மாணவன் ச_டலமாக மீட்_கப்பட்டார்.

குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த, பண்டாரிக்குளம் விபுலாநந்தா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு ம_ரண_மடைந்தவராவார்

hey