வவுனியாவில் உள்ள விவசாயிகளினால் தடுக்கப்பட்ட அனர்த்தம்வவுனியாவில்

வவுனியாவில் விவசாயிகள் ஒன்றிணைந்து ஏற்படவிருந்த பேரனர்த்தமொன்றினை தடுத்துள்ளனர்.

வவுனியா மூனாமடு குளத்தின் கட்டுப்பகுதியில் இருந்த பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்தமையினால் குளக்கட்டு பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் குளத்தில் அதிகளவான நீர் தேங்கியிருக்கும் நிலையில் குளத்தின் கட்டுப்பகுதி உடைப்பெடுக்கும் நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும் குறித்த குளத்தின் கீழ் விவசாயம் செய்யும் விவசாயிகள் உடனடியாக நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளருக்கு தெரிவித்ததை அடுத்து குறித்த குளக்கட்டை சீர்செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகள் ஒன்றிணைந்து மண் பைகளை இட்டு குளத்தின் கட்டை அடைத்ததுடன், ஏற்பட இருந்த அனர்த்தத்தினையும் தடுத்துள்ளனர்.

hey