வவுனியாவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 141 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்புவவுனியாவில்

ஈழத்திருநாட்டில் சைவசமயத்தை வளர்த்த பெரியவர்களில் ஒருவரான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 141 ஆவது நினைவு தினம் இன்று வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் அமைக்கப்பட்ட குறித்த நினைவுத்தூவிக்கு இன்று (5) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஊடாக தென்னங்கன்றுகளும், புதிய ஆடைகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

hey