வவுனியாவில் கைக்குழந்தைகளுடன் குடியிருப்புப் பகுதிகளை விட்டு வெளியேறிய மக்கள்!



வவுனியாவில்

கடந்த சிலநாட்களாக வீசிவரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வவுனியா வேலங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குப்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் 06வீடுகள் சேதமாகியுள்ளதோடு 04குடும்பங்களைச் சேர்ந்த 15பேர் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் சின்னத்தம்பனை கிராமத்தில் தற்காலிக வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்த காரணத்தினால் வீடுகளுக்குள் கைக்குழந்தைகளுடன் வாழ்வது அபாயமானது எனக் கருதி வேலங்குளம் கிராம சேவையாளரின் ஆலோசனைக்கு அமைய குறித்த கிராம மக்கள் தேவாலயம் ஒன்றில் தற்காலிக முகாம் அமைத்துத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இம்மக்களுக்கு தற்போது அவசர உதவியாகச் சமைத்த உணவுகள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து நிவாரண பணிகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவை.
இதேவேளை தற்காலிகமாகத் தங்கியிருப்போரை 217 வேலங்குளம் கிராமசேவகர் நேரடியாகசென்று பார்வையிட்டிருந்தார்.

hey