கொழும்பிற்கு வரும் பயணிகளுக்காக புதிய பேரூந்து சேவைகள்!



அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி புதிய போக்குவரத்து ஒழுங்குமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இதன்படி பேருந்துகளில் கடமைகளுக்கு செல்லும் மக்களுக்காக அலுவலக பேருந்து சேவைகளை வழங்கும் புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாட்டின் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் கொழும்பிற்கு வருகைதரும் பயணிகளுக்காக குறித்த பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

குறித்த புதிய பேருந்து சேவைகள் இரத்தினபுரி, கேகாலை, சிலாபம், ஹம்பாந்தோட்டை, தங்கல்ல, மாத்தறை, காலி, அம்பலாங்கொடை, அலுத்கம, களுத்துறை, ஆகிய பகுதிகளில் இருந்து முன்னெடுக்கவுள்ளன.

மேற்படி பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் தம்மைப் பதிவு செய்து கொள்வதன் ஊடாக, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு மாதிரி விண்ணப்பமொன்றை தயாரித்து WORD அல்லது PDF முறையில் இலங்கை போக்குவரத்து சபைக்கான முகநூல் தளத்திற்கு Sri Lanka Transport Board – SLTB (https://www.facebook.com/officialSLTB/ ) அல்லது dgmoperation@sltb.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை போக்குவரத்து சபை மேலும் குறிப்பிட்டுள்ளது

hey