வவுனியா மாவட்ட மக்களுக்கு உதவ உத்தியோகத்தர்கள் இரவு வேளையிலும் கடமையில்புரவி புயல் தாக்கம் ஏற்பட்டால் மக்களுக்கு உதவ வவுனியாவில் கிராம அலுவலர் பிரிவுகளில் இரவு வேளையிலும் உத்தியோகத்தர்கள் கடமையில்!

புரவி புயல் தாக்கமானது இன்று இரவு வவுனியாவைத் தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் அவசர உதவிகள் மற்றும் அனர்த்த பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வவுனியாவின் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் அலுவலர்கள் இரவு வேளையிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் கிராம அலுவலர் அல்லது அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரில் ஒருவரை கிராம அலுவலர் அலுவலகம் அல்லது அதற்கு அண்மித்த இடத்தில் தங்கி இருக்குமாறும் பிரதேச செயலாளரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு 2 மணித்தியாலயத்திற்கு ஒரு தடவை அங்குள்ள நிலமை தொடர்பில் அறியத் தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, வவுனியா வடக்கு, செட்டிகுளம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் அலுவலர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 6 மணி தொடக்கம் காலை 6 மணி வரை அவர்கள் ஒவ்வொரு கிராம அலுவலர் பகுதியிலும் தங்கியிருப்பார்கள். புயல் காரணமாக மக்களுக்கு ஏதாவது அனர்த்தம் அல்லது பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் உடனடியாக அவர்களை தொடர்பு கொள்ளுமாறும், தேவையான உதவிகளை வழங்க பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகம் என்பன தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hey