வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி வைப்புவவுனியாவில்

வவுனியா பொலிஸாரினால் விசேட கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒடடும் செயற்றிட்டம் இன்று (02.12.2020) காலை 8.45 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியாவில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்ப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன

குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரில் மீட்டரான வாழ்க்கை சரியான நேரத்தில் மாஸ்க் ஒன்றை சரியாக அணிந்திட மீட்டராய் இருப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் செனவிரத்ன , வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா , வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே , பதில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வவுனியா போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்க மற்றும் பொலிஸார், முச்சக்கரவண்டி சாரதிகள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

hey