இலங்கையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம்உரிய முறையில் முகக் கவசம் அணியாத குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 18 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஏற்றுக் கொண்ட 18 பேருக்கு அபராதம் விதிக்குமாறு பண்டாரவளை நீதிமன்ற நீதவான் கீர்த்தி கும்புருஹேன உத்தரவிட்டுள்ளார்.

பண்டாரவளையில் மரக்கறி விற்பனைக்கு வந்த நபர்கள் உரிய சுகாதார முறையை பின்பற்றாத காரணத்திற்கமைய தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளையில் மரக்கறி விற்பனையாளர்களுக்கு மத்தியில் கொரோனா பரவுவதனை தடுப்பதற்காக உரிய சுகாதார பாதுகாப்பு முறை முன்னெடுக்கப்படுகின்றதா இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன் போது இவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

hey