வவுனியா ஊடாக மன்னார் நோக்கி பயணிக்கும் சூறாவளி மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவத்தினர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கைவவுனியாவில்

கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இது சூறாவளியாக வலுவடைந்து இன்றும் நாளையும் (02,03) திருகோணமலை – வவுனியா ஊடாக மன்னாரை சென்றடையவுள்ளது. இதன் தாக்கமாக பலத்த காற்று மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளது.

மக்கள் மிகவும் அவதானமாக வீட்டில் இருத்தல் வேண்டும் அத்துடன் தற்காலிக வீடுகளில் உள்ளவர்களும் , மரங்களுக்கு அருகில் வசிப்பவர்களும் மின்சார கம்பிக்கு அருகில் வசிப்பவர்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் விவசாய நிலங்கள் நீர் வழிந்தோடும் வகையில் பாசன முறையில் இருத்தல் அவசியமாகும். அவசர தேவைகள் ஏற்படின் 1990 என்ற இலக்கத்தினை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

hey