வவுனியா கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அவசர அறிவித்தல்வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகத்தால் அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள புரவி புயல் காலநிலை மாற்றம் இன்று (02.12.2020) வவுனியாவில் சூறாவளியாக உருவாகலாம். எனவே, அவ்வாறு உருவாக்கம் பெற்றால் அதன் தாக்கத்தை குறைக்க கிராம அலுவலர்கள்,

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காலையில் விரைவாக கடமைக்குச் சென்று கிராமத்தில் உள்ள ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் ஊடாக மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவும்.

தகரம்-தாள் கூரையின் கீழ், மரத்தின் கீழ் அல்லது மின்சாரக் கோட்டின் கீழ் வாழும் மக்களை வெளியேற்றி, பள்ளிகளில் ஒரு பேரழிவு தடுப்பு சேவை மையத்தை நிறுவி, அங்கு கோவிட் -19 தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யவும்.

அத்துடன், சமைத்த உணவை வழங்க தயாராக இருக்கவும். அம்புலன்ஸ் சேவைகள் அல்லது முச்சக்கர வண்டி சேவைகளைப் பெற தயாராக இருக்கவும்.

மேலும், சூறாவளி தாக்கம் ஏற்படின் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து பாதிப்பை கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும் என பிரதேச செயலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

hey