யாழில் கொரோனா அச்சுறுத்தல்: 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்யாழ்.மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர், சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் மேலும் கூறியுள்ளதாவது,
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரை 22பேர் கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள்.

அதனைவிட 1010குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேருக்கு அரசினால் வழங்கப்படுகின்ற நிவாரணங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றோம்.

இருந்த போதிலும், பொது மண்டபங்கள் மற்றும் ஏனைய ஒன்றுகூடல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதைய நிலையில் ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாண மாவட்டம் சற்று கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.

எனினும் இனிவரும் காலங்களிலும் பொதுமக்கள் விழிப்பாக இருந்து இந்த கட்டுப்பாட்டினை தொடர்ந்து பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

hey