தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவுதிகள், தமது பெயர்களை மாவட்ட செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொழில் கேந்திர நிலையங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இது தொடர்பில் மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுலா கூறுகையில்,தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகளை, தனியார் துறைகளிலுள்ள தொழில் வெற்றிடங்களில் நியமிக்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தனியார் துறைகளில் தொழில்வாய்ப்புக்களை எதிர்பார்த்து காத்திருப்போர், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.dome.gov.lk இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லையென்றால், மாவட்ட செயலகங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தொழில் கேந்திர நிலையத்தில் பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொவிட் தொற்று பரவி வருகின்ற நிலையில், தொழில் வாய்ப்புக்களுக்காக வீட்டில் இருந்தவாறே இணைய வழியில் பதிவு செய்யலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அல்லது மாவட்ட தொழில் கேந்திர நிலையங்களை தொலைபேசியூடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதன்படி மாவட்டம்தொலைபேசி இலக்கங்கள் வருமாறு.
கொழும்பு011-2369258,
கம்பஹா033-2248990,
களுத்துறை034-2236162,
காலி091-2233906,
மாத்தறை041-2231319,
ஹம்பாந்தோட்டை047-2242766,
கண்டி081-2068229,
மாத்தளை066-2222824,
நுவரெலியா052-2224186,
கேகாலை035-2221733,
இரத்தினபுரி045-2232996,
குருநாகல்037-2221402,
புத்தளம்032-2266253,
பதுளை055-2228030,
மொனராகலை055-2277248,
அநுராதபுரம் 025-2234988,
பொலன்னறுவை 027-2056715,
அம்பாறை063-2222233,
மட்டக்களப்பு065-2227193,
திருகோணமலை026-3209245,
யாழ்ப்பாணம்021-2219359,
வவுனியா024-2228025,
மன்னார்023-2222232,
கிளிநொச்சி021-2283966,
முல்லைத்தீவு021-2290037.