வவுனியாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கார்த்திகை திருநாள் : ஏற்றப்பட்ட 1000 இற்கும் மேற்பட்ட விளக்குகள்வவுனியாவில்

நாட்டில் கோவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடையவும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் மக்கள் அனைவரும் கோவிட் – 19 தாக்கத்திலிருந்து விடுபட்டு சுமுகமுடன் வாழ பிராத்தனை செய்து 1500 தீபமேற்றப்பட்டது.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் கார்த்திகைத் தீபத் திருநாளான நேற்றைய தினம் (29.11) மாலை இவ் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன.

பெருன்பான்மை இனத்தினை சேர்ந்தவரின் ஆடைத்தொழிற்சாலையாக காணப்படுகின்ற போதிலும் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் 80 வீதமானவர்கள் தமிழர்கள் ஆவார்கள்.

இதனையடுத்து ஆடைத்தொழிற்சாலையின் பொது முகாமையாளர் சமில கொலம்பகே அவர்களின் ஆலோசனைக்கமைய கார்த்திகை விளக்கிட்டை முன்னிட்டும் கோவிட் – 19 தாக்கத்திலிருந்து நாடு மீண்டேழ ஆசி வேண்டியும் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

hey