தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களை பதிவு செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளுக்கான தொழில்வாய்ப்புக்கான அனுமதி வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுக்கு தொழில் வாய்ப்பிற்கு செல்வது குறித்த பதிவு செய்யும் நடவடிக்கை பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.