வவுனியாவில் திருக்கார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்கு விற்பனை மும்முரம்வவுனியாவில்

தீபப் திருநாளான திருக்கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளதையொட்டி வவுனியா நகரில் பகுதியில் அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரத்தன்று அக்னியாய் சிவந்து அறத்தைக்கூறிய சிவனின் தரிசனம் வேண்டி கொண்டாடப்படும் இத்திருநாளன்று விரதமிருந்து நெல்பொறி அல்லது அவல்பொறியை நைவேத்தியமாக படைத்து வீடு மற்றும் நாம் புழங்கும் இதர இடங்களில் விளக்கேற்றி வழிபடுவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திருக்கார்த்திகை தீபப் திருநாள் (நவ 29ம் தேதி) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி பெண்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவார்கள். குறிப்பாக வீட்டின் முன்புறம் மற்றும் மாடிப் பகுதிகளில் வரிசையாக அகல் விளக்குகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றுவார்கள். மேலும் வணிக நிறுவனங்கள், கோயில்களில் அதிகளவிலான விளக்குகள் ஏற்றப்படும். சிவன் கோயில்களில் சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்வும் வெகு விமரிசையாக நடைபெறும்.

தீப திருநாளையொட்டி வவுனியா உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் கடை வீதிகளில் அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. வீதியோரங்களில் தள்ளுவண்டி கடைகளில் பலவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

hey