வவுனியாவில் இராணுவம் மற்றும் பொலிசாரின் கண்காணிப்புக்கு மத்தியிலும் மாவீரர் நாளை முன்னிட்டு ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் அஞ்சலிவவுனியாவில்

தமிழ் மக்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் ம ரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்க செய்யப்பட்டதுடன், மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

பொது இடங்களில் ஒன்று கூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை விதித்திருந்ததுடன், இராணுவமும் பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ம ரணித்த தமது உறவுகளுக்காக வவுனியாவில் உள்ள பல இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் மணி ஒலிக்கப்பட்டதுடன், 6.07 இற்கு வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்

hey