தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோரை ஏற்றிச் சென்ற பேருந்து கோர விபத்து!யாழ்.விடத்தல்பளை

யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஓமான் நாட்டிலிருந்து, நாடு திரும்பிய 25 பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி – பளை, ஆனைவிழுந்தான் பகுதியில் இன்று காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

சாரதி தூங்கியதால் குறித்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் மூவர் உடனடியாக அம்பியூலன்ஸ் வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையோர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 254 பேர் தனிமைப்படுத்தலுக்காக விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 11 பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் சுகாதார பிரிவினர் மற்றும் படையினர் இருப்பதோடு, பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey