வவுனியா செட்டிக்குளம் பகுதியில் மின்சாரம் தா க் கி ஒருவர் ப லிவவுனியா, செட்டிகுளம் பகுதியில் தோட்டத்திற்கு பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தா க் கி இளைஞர் ஒருவர் ம ரணமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், காந்தி நகர் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் இருந்த தோட்டத்தில் காட்டு விலங்குகளின் பாதுகாப்புக்காக மின்சாரம் பொருந்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை தோட்டத்தில் குரங்குகள் நின்றமையால் அதை வி ரட்டிச் சென்ற போது தவறுதாக தோட்ட வேலியில் இருந்த மின்சாரத்தில் அகப்பட்டு ம ரணமடைந்துள்ளார்.

இவ்வாறு ம ரணமடைந்தவர் செட்டிகுளம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஜெராட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

hey