கிளிநொச்சியில் அதிகரித்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கைகிளிநொச்சியில் ஐவருக்கும் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த ஏழு பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 71 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

இதன்போது கிளிநொச்சி தொண்டமான் நகரத்தில் (A 9 வீதியில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் கிளிநொச்சி தொலைத்தொடர்பு கோபுரத்திற்கும் இடைப்பட்ட பகுதி )தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபடும் ஒரே விற்பனை நிலையத்தை சேர்ந்த 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன் மேற்படி விற்பனை நிலையத்தின் அருகில் இருக்கின்ற இன்னும் ஒரு விற்பனை நிலையத்தில் தொழில் புரியும் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

அருகிலுள்ள விற்பனை நிலையத்தில் கடமை புரிந்து கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மருமகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

hey