இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!



வங்காள விரிகுடாவில் உருவான ‘நிவார்’ சூறாவளியானது மாற்றமடைந்து காங்கேசன்துறையில் இருந்து 230 கடல் மைல்தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சூறாவளியானது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் இருந்து, இந்தியாவின் தமிழக கரையோர பகுதியை நோக்கி நகரும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியின் தாக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறுகின்றது.

குறிப்பாக வடமாகாணத்தின் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதிகளில் மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வரை அதிகரித்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு ஊடாக மாத்தறை வரையிலான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரையிலான பலத்த காற்று வீசுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள மீனவர்களை, கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

hey