மாகாணசபைத் தேர்தல் நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம்மாகாணசபைத் தேர்தலை நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 2021ம் ஆண்டு சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

கடந்த நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படவிருந்த போதிலும் எல்லை நிர்ணயம் தொடர்பிலான சர்ச்சைகளினால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலா அல்லது புதிய முறையிலா நடாத்துவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பழைய முறையில் தேர்தல் நடாத்துவது என்றால் அமைச்சரவையின் அனுமதியுடன் தேர்தலை நடாத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய மாகாணசபை தேர்தல் முறைமை அமுல்படுத்தப்படும் திகதியை காலம் தாழ்த்தி பழைய முறையில் தேர்தலை நடாத்த முடியும் என சட்ட வல்லுனர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

hey