வவுனியாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரினால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ் மொழிவவுனியாவில்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பு குழு இணைத்தலைவரின் காரியாலயத்தில் அமைந்துள்ள பெயர்ப்பலகையில் சிங்கள மொழிக்கு முதலிடம் வழங்கப்பட்டு தமிழ் மொழி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள அநோகமான வவுனியா பிரதேச செயலகம் , வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை , அஞ்சல் அலுவலகம் உட்பட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர்பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தமிழ் மக்களின் வாக்குகளினால் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பு குழு இணைத்தலைவரின் காரியாலயத்தில் அமைந்துள்ள பெயர்ப்பலகையில் சிங்கள மொழிக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளமை மன வேதனையளிக்கும் விடயமென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

hey