யாழ்.பல்கலை மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் ச டலமாக மீட்பு



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவன் இன்றையதினம் தூ க்கி ல் தொங்கிய நிலையில் ச டலமாக மீ ட் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் தெற்கை சொந்த இடமாகவும், துன்னாலை வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவனே ச டலமாக மீ ட்கப்பட்டவராவார்.

குறித்த மாணவன் கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி இருந்து தமது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த மாணவன் இன்று வகுப்புகளுக்குச் சமுகமளிக்காததால் அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டுள்ளனர். தொடர்சியாக அழைப்புகளை மேற்கொண்டபோதும் அவர் பதிலளிக்காததால் ச ந்தேக மடைந்த நண்பர்கள் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே, அவருடைய நண்பர்கள் க தவை உடைத்து உட்சென்று பார்த்தபோது குறித்த மா ணவன் தூ க் கி ல் தொ ங் கி ய நிலையில் ச ட லமாகக் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டது. கோப்பாய் பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

hey