கடைசி மட்டும் 90S கிட்ஸ்கு கல்யாணமே நடக்காதா..? தன்னை தானே திருமணம் செய்த வாலிபர்பிரேசிலில், நிச்சயம் செய்த காதலி தன்னை பிரேக்-அப் செய்ததால், குறித்த நாளில், தன்னை தானே திருமணம் செய்து கொண்டார் வாலிபர் ஒருவர்.

டியாகோ ரபாலோ பிரேசிலை சேர்ந்த டாக்டர். இவர், ஒரு ஆடம்பர ரிசார்ட் ஒன்றில், தன்னை தானே திருமணம் செய்து கொண்டு உலக பிரபலம் ஆகியிருக்கிறார்.

தகவல்களின் படி, டியாகோவிருக்கும் விடோர் புவேனோ என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமண நிச்சயம் ஆகி இருக்கிறது. இவர்களுக்கு ஜூலை மாதம் திருமணமாக இருந்த வேளையில் விடோர் புவேனோ திருமண நிச்சயத்தை ரத்து செய்து, டியாகோ உடன் பிரேக்-அப் செய்தார்.

சம்மர் முழுவதும் தகதக வெயிலில், இவர்கள் சுட்டெரிக்கும் சண்டையில் இருந்ததாக அறியப்படுகிறது.

என்ன பேச்சுவார்த்தை நடத்தியும் புவேனோ திருமண நிச்சயம் ரத்து, ரத்து தான் என்று உறுதிப்பட கூற, டியாகோ அனைவரும் திடுக்கிடும் வகையில் ஒரு முடிவு எடுத்தார். தான் குறித்த நாளில் தன்னை தானே திருமணம் செய்துக் கொள்வது.

திருவாளர் டாக்டர் டியாகோ ரபாலோ கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி ஒரு ஆடம்பர ரிசார்ட் ஒன்றில் தனது உற்றார், உறவினர்களுக்கு விருந்து அளித்துள்ளார். இந்த விருந்தில் ஏறத்தாழ 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. பாஹியா எனும் இடத்தில இந்த திருமண விருந்து நடந்திருக்கிறது.

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட டியாகோ, தனது திருமண நாள் தான், தனது வாழ்நாளிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று தெரிவித்திருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார் டியாகோ.

ஒரு பதிவில் தனது திருமணத்திற்கு ஆதரவளித்த அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்திருந்தார் டியாகோ. மேலும், தனது எக்ஸ்-காதலிக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார் டியாகோ.

அதில், குறிப்பாக எக்ஸ்-காதலியை குறிப்பிட்டு, உன்னையும், உனது சுதந்திரத்தையும், நீ எடுத்த முடிவையும் மதிக்கிறேன், நீ எங்கே இருக்க விரும்புகிறாயோ, அங்கே மகிழ்ச்சியாக இரு என கூறி இருந்தார்.

hey