வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் க.தபிசாந் 192 புள்ளிகளைப் பெற்று சாதனை : குவியும் பாராட்டுகள்வடக்கு வலயத்தில்…

வவுனியா வடக்கு வலயத்தில் 7 ஆவது வருடமாகவும் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் முதலிடம் பெற்றுள்ளது என பாடசாலை அதிபர் திருமதி கமலா சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா வடக்கு வலயத்தில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் க.தபிசாந் 192 புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதுடன், மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் இருந்து 52 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் சித்திபெற்றுள்ளதுடன், 16 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

7ஆவது வருடமாக பாடசாலையின் சாதனைப் பயணம் தொடர கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகள் எனவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

hey