வவுனியாவில் தரமற்ற முகக்கவசங்களை விற்பனை செய்த வர்த்தக நிலையம்வவுனியாவில்

கொவிட் 19 இன் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கொவிட் -19 தாக்கம் அற்ற வவுனியாவை கட்டியேழுப்புவோம் எனும் எண்ணக்கருவில் வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இவ் திடீர் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களான சிவரஞ்சன் , வாகீசன் , சப்னீன் ஆகியோர் ஈடுபட்டு வவுனியா நகரிலிலுள்ள வர்த்தக நிலையங்களை சோதனைக்குட்படுத்தியிருந்தனர்.

இதன் போது பஜார் வீதியில் அமைந்துள்ள ஒர் வர்த்தக நிலையில் தரம் குறைவான , பாவனைக் ஒவ்வாத முகக்கவசங்களை விற்பனை செய்தமையினை அவதானித்த சுகாதார பரிசோதர்கள் அவற்றை கைப்பற்றியதுடன் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் பெயர் விபரங்களை திரட்டினர்.

மேலும் வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் 3 படிவம் () முகக்கவசங்களை விற்பனை விற்பனை செய்யுமாறு பணிப்புரையும் விடுத்திருந்தனர்.

hey