நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 375 குடும்பங்கள் பாதிப்புநாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக 375 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 9 மாவட்டங்களில் வசிக்கும், 375 குடும்பங்களை சேர்ந்த 532 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் இரத்தினபுரி மாவட்டத்தில் 41 குடும்பங்களை சேர்ந்த 164 பேரும், வடமாகாணத்தில் 86 குடும்பங்களை சேர்ந்த 314 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அனர்த்தங்கள் காரணமாக 283 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

hey