புது காதலனோடு இருக்கும் போது தவறுதலாக சென்ற மொபைல் அழைப்பு : புது காதலனோடு என்ன கதைத்தார் தெரியுமா..?பிரித்தானியாவில், புதிய காதலனைத் தேடிச் சென்ற பெண் ஒருவர் காதலனுடன் இருக்கும்போது, தவறுதலாக கைபட்டு கணவனின் மொபைலுக்கு அழைப்பு சென்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான் சர்ரேயை சேர்ந்த Gareth Rees (49)இன் மனைவி Claire, தன் கணவனைப் பிரிந்திருந்தார்.

மனைவி பிரிந்து சென்றதை தாங்க இயலாத வருத்தத்தில் Gareth இருக்கும்போது, ஒரு நாள் தன் மனைவிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார் அவர். ஆனால், பதில் செய்தி அனுப்புவதற்கு பதிலாக Claire, மொபைலின் அழைப்பு பொத்தானை தவறுதலாக அழுத்தியிருக்கிறார்.

அந்த நேரத்தில், Claire தனது புதிய காதலனான Glen Ryanஉடன் ஹொட்டல் ஒன்றில்இருந்திருக்கிறார். அவர்கள் இருவரும் பாலுறவு கொள்வது தொடர்பாக பேசுவதை நான்கு நிமிடங்கள் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார் Gareth.

திடீரென தான் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பினேனா என பார்த்த Claire, தான் தவறுதலாக அழைப்பு பொத்தானை அழுத்திவிட்டிருப்பதைக் கவனித்துள்ளார். உண்மையை உணர்ந்ததும் அதிர்ச்சியடைந்த Claire, உடனே கணவனைத் தேடி, அவர் இருந்த வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது Gareth தன் நண்பர் ஒருவர் ஊருக்கு சென்றுவிட்டதால், அவரது வீட்டைக் கவனிப்பதற்காக Churt என்ற இடத்திலுள்ள அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

அந்த வீட்டுக்கு Claire சென்று பார்க்கும்போது, நீச்சல் உடையில் நீச்சல் குளத்திற்குள் சுயநினைவின்றிக் கிடந்திருக்கிறார் Gareth. உடனே மருத்துவ உதவிக்குழுவினர் அழைக்கப்பட, அவர்கள் வந்து அவரை சோதித்துவிட்டு, Gareth ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

அவர் அளவுக்கதிகமாக குடித்திருப்பதும் தெரியவந்தது. தனது தவறான தொலைபேசி அழைப்புதான் கணவரின் இந்த துயர முடிவுக்கு காரணம் என்றால், தான் இந்த குற்ற உணர்ச்சியுடனேதான் இனி வாழவேண்டும் என்று கூறுகிறார் Claire.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், Garethக்கு தண்ணீரைக் கண்டால் பயம், வாழ்நாள் முழுவதும் தன்ணீரைக் கண்டு பயந்தே வாழ்ந்த Gareth, கடைசியில் தண்ணீரிலேயே தன் வாழ்வை முடித்துக்கொண்டிருப்பது துயரம்தான்!

hey