வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு பயணிகள்வவுனியா தனிமைப்படுத்தல் மையங்களில் துபாய், எதியோப்பியா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட விமான பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் இவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இராணுவத்தினரின் பாதுகாப்புடன் 15 பேருந்துகளில் கொரோனா தொற்று ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு வவுனியா, பம்மைமடு இராணுவ முகாம், வேலங்குளம் விமானப்படைத்தளம் மற்றும் பெரியகாடு இராணுவ முகாம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று நோய் தனிமைப்படுத்தல் மையத்திற்கு இராணுவத்தால் அழைத்து வரப்பட்டனர்.

குறித்த வெளிநாட்டு பயணிகள் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

hey