வவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்றுவவுனியாவில்..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11.2020) காலை 8.30 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் விழாக்குவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் , நகரசபை உறுப்பினர் ந.சேனாதிராஜா , வவுனியா வடக்கு பிரதேச சபை தலைவர் தனிகாசனம் , தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் , பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் ஜொகசோதிநாதன் , வைத்தியர் மதி , வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

வவுனியா தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவான இச் சிலை நிறுவப்பெற்றுள்ளது.

ஞாபகார்த்த சிலை அமைப்புக் குழுவினரதும் அதன் தலைவர் நா.சேனாதிராசா ஆகியோரதும் வேண்டுகோளுக்கிணங்க வவுனியாவின் மூத்த சட்டத்தரணி முருகேசு சிற்றப்பலம் அவர்களினால் கடந்த 2015ஆண்டு 07ம் மாதம் 25ம் திகதி இச் சிலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

hey