இந்த ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கல்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் மேம்பட்ட நிலை தேர்வுக்கு அமரும் மாணவர்கள் கால்குலேட்டர்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேர்வுத் துறை கூறுகிறது.
கணக்கியல், பொறியியல் தொழில்நுட்பவியல், தொழில்நுட்பவியல் மற்றும் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் ஆகிய பாடங்களில் தோற்றும் மாணவர்கள் கல்குலேட்டர்களை பயன்படுத்தலாம் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் புஜித தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்கள் பரீட்சையில் சாதாரண வகை கல்குலேட்டர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.