வவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடைவவுனியா நகரப் பகுதியில்

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தா க்கத்தை கருத்தில் கொண்டும், வடமாகாண ஆளுனரின் உத்தரவுக்கமையவும் வவுனியா நகரசபையில் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதாக நகரசபையால் கடந்த இரு தினங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் பொருட்கள் இன்று (06.11) நகரசபையால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன்படி வீதியோரங்களில் மரக்கறி வகைகள், பன்சிப் பொருட்கள், புடவைகள் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

hey