வவுனியாவில் வர்த்தகமானி அறிவித்தலை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் அரிசிகள்அரிசிக்காக விலைகள் தொடர்பான வர்த்தமானி வெளியீடப்பட்டிருந்த போதிலும் வவுனியா மாவட்டத்தில் அதிக விலைக்கு அரிசிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபையின் வேண்டுகோளுக்கமைய அவித்த மற்றும் அவிக்காத சிவப்பு மற்றும் வெள்ளை சம்பா அரிசி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 94 ரூபாவாகவும் அவித்த நாட்டரிசி ஒரு கிலோவின் விலை 92 ரூபாவாகவும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி கிலோ ஒன்றின் விலை 89 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு நேற்று முன்தினம் (04.11.2020) வர்த்தமாணி அறிவித்தல் வெளியாகியிருந்தன.

எனினும் வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் அரசின் வர்த்தகமானி அறிவித்தலை மீறி அதிக விலைகளில் அரிசிகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் அரிசி ஆலைகளும் அதிக விலைகளுக்கே வர்த்தக நிலையங்களுக்கு அரிசிகளை விற்பனை செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட நுகர்வோர் அதிகாரசபையினர் அசமந்த போக்காக செயற்படுவது கவலைக்குறிய விடயமே

hey