வட மாகாணத்தில் சுமார் 9000 தமிழ் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க திட்டம்…?வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த விடயம் இன்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம் -4500, வன்னி – 4500 என்ற அடிப்படையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைக்கவுள்ளனர்.

இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்படுவோர் வடக்கில் வேலை செய்ய இடமளிக்கப்படுவதுடன், 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாத சம்பவம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

hey