வவுனியா அம்மாச்சி உணவகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்வவுனியா அம்மாச்சி

நாட்டில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் அம்மாச்சி உணவகத்தின் சுகாதார நிலைமை தொடர்பில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே காணப்படும் அம்மாச்சி உணவகத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன் மலசல கூடம் , சமயலறை , களஞ்சிய அறை , விற்பனையிடம் என்பவற்றினை பார்வையிட்டதுடன் உணவகத்தின் பணியாற்றும் ஊழியர்களின் சுகாதார நடைமுறை தொடர்பிலும் ஆராந்திருந்தார்.

அத்துடன் சுகாதார நடைமுறைகளை பேணுவதற்காகவும் அங்குள்ள இடவசதிகளை கருத்தில் கொண்டும் குறித்த உணவகத்தில் காணப்படுகின்ற மலசலகூடத்தினை அங்கு கடமையாற்றும் ஊழியர்களின் மாத்திரமேன தீர்மானிக்கப்பட்டதுடன் புதிய பேரூந்து நிலையத்தில் காணப்படும் விசாலாமான கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பிரதி மாகாண விவசாய பணிப்பாளரின் இவ்வாறான திடீர் விஜயம் தொடர்பில் பொதுமக்கள் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளனர்.

<

hey