வவுனியாவில் கொரோனா அச்சம் காரணமாக மீன் விற்பனை வீழ்ச்சி



வவுனியாவில்

இலங்கையில் பேலியகோட மீன் சந்தையில் கொவிட் – 19 கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களாக 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு தற்போது மிக அ பாயகரமான சூழ்நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் பேலியகோட மீன் சந்தையுடன் தொடர்புடைய நபர்கள் வடமாகாணம் உட்பட நாடு முழுவதும் தனிமைப்படுத்துள்ள நிலையில் மீன் தொடர்பில் மக்கள் பாரிய அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக வவுனியா மாவட்டத்திற்கு யாழ்ப்பாணம் , மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து வருகின்ற மீன் வகைகளின் விற்பனை வீழ்ச்சி நிலையில் காணப்படுகின்றது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் மக்கள் மீன்களை பெரிதளவில் கொள்வனவு செய்யவில்லை என்பதுடன் மீன்கள் விற்பனையின்றி நகர மீன் சந்தை , குருமன்காடு மீன் சந்தை , குழுமாட்டுச்சந்தி மீன் சந்தை போன்ற இடங்களில் மீன்கள் தேங்கி காணப்படுகின்றது.

இதன் காரணமாக மக்களின் நடமாட்டமின்றி மீன் சந்தைகள் வெறுச்சோடி காணப்படுவதுடன் வியாபாரிகளும் நட்டமடைந்துள்ளனர்.

hey