வவுனியாவில் மக்களுக்கு நியாயமான விலையில் 1000கிலோகிராம் உழுந்து பகிர்ந்தளிப்புஉழுந்து நியாய விலையில்

வவுனியா பிராந்திய பிரதி விவசாயப் பணிப்பாளர் விதை, நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலையத்தினால் இன்று (03.11) 1000 கிலோகிராம் உழுந்து நியாய விலையில் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இலங்கையில் வவுனியா மாவட்டத்திலிலேயே அதிகளவிலான உழுந்து விளைச்சல் காணப்படுகின்றது. நாட்டின் உள்ளுர் விவசாயிகளின் பொருளாதாரத்தினை முன்னேற்றும் நோக்கில் அரசாங்கத்தினால் உழுந்து இறக்குமதி தடை செய்யப்பட்டு உள்ளுர் உழுந்து உற்பத்தியினை ஊக்கிவிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் காலபோகத்தில் உழுந்து செய்கை பிரதான பயிராக செய்கை பண்ணப்பட்டு வரப்படுகின்றனது காலபோகம் 2020/21 உழுந்து செய்கைக்கான விதை உழுந்து மிகவும் தட்டுப்பாடாக காணப்படுவதாலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் உழுந்துச்செய்கையை மேற்கொள்வதற்க்கு தடையாக காணப்படுகின்றது எனினும் காலபோகச்செய்கைக்காக பிரதி விவசாயப்பணிப்பாளர் விதைகள் நடுகைப்பொருட்கள் நிறுவனம் இதுவரை 25650 கிலோ விதை உழுந்தை விநியோகித்துள்ளது.

இதன் இறுதி விநியோகம் இன்று 03.11.2020 இல் 1000 கிலோ விதை உழுந்து விநியோகிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் ஆர்வமாக காணப்பட்ட போதும் அனைத்து விவசாயிகளுக்கும் விநியோகிக்க முடியாததன் காரணத்தினால் விவசாயிகள் விதை உழுந்து கிடைக்காமையினால் மிகுந்த மனத்தாக்கத்துடன் திரும்பியிருந்தனர்.

hey