வவுனியாவில் பலசரக்கு கடைக்குள் கட்டுப்பாட்டை இழந்து மோதிய மோட்டார் சைக்கிள்வவுனியா உமாமகேஸ்வரன் சந்தியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து கடை ஒன்றிற்குள் புகுந்து மோதி விபத்துக்குள்ளானது.

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியை நோக்கி கோவில்குளம் உமாமகேஸ்வரன் வீதியால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேரே இருந்த பலசரக்குக் கடை ஒன்றிற்குள் புகுந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சிறிய காயத்திற்குள்ளாகியுள்ளார்.

இவ்விபத்தானது நேற்று (02) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. குறித்த விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிள் சிறிய சேதத்திற்கு உள்ளானதுடன், வர்த்தக நிலையத்தின் பொருட்கள், கண்ணாடிகள் உடைந்து சேதத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு மோட்டார் வண்டியை செலுத்தியவர் ம து போ தை யி ல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குறித்த நபரை கைது செய்து,

விபத்து ஏற்படுத்திய மோட்டார் வண்டியையும் கைப்பற்றி பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் சென்று மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

hey