வவுனியாவிலிருந்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை பொலனறுவை கொரோனா வைத்தியசாலைக்கு வருமாறு அழைப்புவவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர் மற்றும் 10 தாதியர்களை பொலனறுவை கொரோனா வைத்தியசாலைக்கு கடமைக்கு வருமாறு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் பற்றாக்குறையாகவுள்ள நிலையில், பொலநறுவையில் உள்ள கொரோனா நோயாளர் வைத்தியசாலைக்கு வைத்தியர்கள், தாதியர்களை அவசரமாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர், 10 தாதியர்கள் பொலநறுவையில் உள்ள கொரோனா வைத்தியசாலைக்கு இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதுடன்,இவர்கள் 14 நாட்கள் அங்கு கடமை புரிந்த பின்பு, 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர்.

இவர்கள் மீண்டும் வவுனியா வைத்தியசாலைக்கு வந்த பின்னர் அடுத்த குழு செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hey