10 முறை திருமணம் செய்தும் திருப்தி இல்லை : 10 அல்ல 100 திருமணங்களும் செய்ய தயாராக இருக்கிறேன் என அறிவித்த பெண்அமெரிக்காவில் 10 முறை திருமணம் செய்து கொண்டுள்ள பெண், தன்னை நேசிக்கக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து திருமணம் செய்வேன் என அதிரடியாக கூறியுள்ளார்.

கேசி என்ற 56 வயது பெண் தான் இந்த அரிய சாதனையை செய்துள்ளார்.
கேசி தனது முதல் கணவருடன் 8 ஆண்டுகள் வாழ்ந்தார், இது தான் அவர் ஒரு மண வாழ்க்கையில் அதிகபட்சமாக இருந்த காலமாகும்.

குறைந்த பட்ச மணவாழ்க்கை என பார்த்தால் மற்றொரு கணவருடன் 6 மாதங்கள் மட்டுமே வாழ்ந்து வி வா கரத்து பெற்றிருக்கிறார். தற்போது பத்தாவது கணவரையும் பிரிகிறாராம் கேசி.

அவர் கூறுகையில், என் திருமணங்களை நான் வேடிக்கையாக பார்க்கவில்லை, அது உண்மையில் வலி நிறைந்தது தான்.

ஒரு கணவருடன் வாழும் போது அந்த திருமண வாழ்க்கையை இனி தொடர முடியாது என எனக்கு தோன்றினால் நாம் வி வா கரத்து பெற்று கொள்ளலாம் என கூறி முதலில் நான் தான் விலகுவேன் என கூறியுள்ளார்.

எப்படியிருந்தாலும் தோல்வியுற்ற 10 திருமணங்கள் கேசியை புதிய திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதை நிறுத்தவில்லை.

தன்னை நேசிக்கக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து முயற்சிப்பேன் என சபதம் போடுகிறார் கேசி!

hey